மேலும் செய்திகள்
டூ - வீலரை சத்தமாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது
01-Nov-2024
செயின் பறித்த இளம்பெண் கைதுதேனி: தேனி காமராஜர் லயன் கண்ணாத்தாள் கோயில் தெரு மூதாட்டி தெய்வானை 80. வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரிடம் வீட்டருகில் பவர் ஹவுஸ் தெரு கர்ப்பிணி சுவேதா 21, வந்தார். தெய்வானையிடம் குடிக்க தண்ணீர் கேட்டு, பேச்சுக் கொடுத்தார். திடீரென மூதாட்டியிடம் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு ஓடினார். தெய்வானை புகாரில் தேனி போலீசார் சுவேதாவை கைது செய்தனர்.பணம் கொடுக்காத பயணிக்கு அடிதேனி: சின்னமனுார் நடுத்தெரு ஜீவானந்தம் 43. இவர் மீது மனைவி போடி மகளிர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். விசாரணைக்காக அக்.11ல் தேனி வழியாக ஆட்டோவில் போடி சென்றார். மீண்டும் தேனி புது பஸ் ஸ்டாண்ட் திரும்பினார். ஆட்டோ டிரைவர் தேனி விஸ்வதாஸ் காலனி மாரிராஜன் 39, வாடகை கேட்டார். பணம் இல்லை என ஜீவானந்தம் தெரிவித்தார். கோபமடைந்த ஆட்டோ டிரைவர் ஜீவானந்தத்தை தாக்கினார். காயமடைந்த ஜீவானந்தம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.பெட்டிகடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்தேனி: தேனியில் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் தவமணி மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடைக்கு சீல் வைக்க உணவுப் பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்தனர். உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் உத்தரவில் தேனி நகர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் தவமணி பெட்டிக்கடைக்கு போலீசார் முன்னிலையில் 'சீல்' வைத்தார். மேலும் தடை செய்ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதற்காக ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது.அவதுாறாக பேசிய சகோதரர்கள் கைதுதேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஏ.புதூர் நடுத்தெரு முத்தையா 23. தென்னை மரம் ஏறும் தொழிலாளி. சிறுகுளம் கண்மாய் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, குள்ளப்புரம் கிழக்கு தெரு சுரேஷ். இவரது தம்பி ராஜா ஆகியோர் முத்தையாவை அவதுாறாக பேசினர். ஜெயமங்கலம் போலீசார் சுரேஷ், ராஜாவை கைது செய்தனர்.லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைதுஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டி.சுப்புலாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 147 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தன. விசாரணையில் தேனி நேதாஜி ரோடு ஆறுமுகம் 72, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து லாட்டரி சீட்டுகள், ரூ. 13,500ஐ கைப்பற்றினர்.கொலை மிரட்டல் இருவர் கைதுபோடி: சுந்தரராஜபுரம் பட்டாளம்மன் கோயில் தெரு கமலக்கண்ணன் 21. கட்டடத் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் 23. தங்கை நிகிதாவிடம் பேசிக் கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த நிதிஷ்குமார், சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்த நண்பர் அருணுடன் 19, சேர்ந்து கமலக் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின் கத்தியால் இடது கண்ணம், தலை, கழுத்து பகுதியில் கிழித்து காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். கமலக்கண்ணன் புகாரில் போடி தாலுகா போலீசார் நிதிஷ்குமார், அருண் இருவரையும் கைது செய்தனர்.இடையூறு: இருவர் கைதுதேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி ராஜவேல் 25. அதேப்பகுதி மேட்டுவளவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 25. இருவரும், வைகை அணை ரோடு ஜெயமங்கலம் பிரிவில் நின்று கொண்டுபொது மக்களை அவதுாறாக பேசினார். போலீசார் எச்சரித்தும், தொடர்ந்து திட்டினார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை, இருவரையும் கைது செய்தார்.மது பதுக்கிய வாலிபர் கைதுதேவதானப்பட்டி: தெற்கு தெரு ராமபாண்டி 29. இவர் தனது டூவீலரில் வைத்து காந்தி மைதானம் அருகே வ.உ.சி., தெருவில் 70 மது பாட்டில்களை விற்பனை செய்து வந்தார். எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை, ராமபாண்டியை கைது செய்து, டூவீலர், மதுபாட்டில்கள், 1,050 ரூபாயை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.-
01-Nov-2024