மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
28-Feb-2025
டிராக்டர் மோதி டிரைவர் காயம்தேனி: பழனிசெட்டிபட்டி அண்ணாநகர் முருகன்52, ஆட்டோ டிரைவர். இவரது மகளை பார்ப்பதற்காக கோடாங்கிபட்டி சென்று மீண்டும் மாரியம்மன் கோவில்பட்டி ரோட்டில் திரும்பினார். எதிரே வந்த டிராக்டர் ஆட்டோ மீது மோதியது. இதுபற்றி டிராக்டர் டிரைவரிடம் முருகன் கேட்டார். டிராக்டர் டிரைவர் முருகனை டிராக்டரை வைத்து இடித்து வீட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்பகுதியில் இருந்தவர்கள் ஆட்டோ டிரைவரின் மகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முருகனை மருத்துவமனையில் சேர்த்தார். காயமடைந்தவரின் மனைவி ஜெயலட்சுமி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுதேனி: வீரபாண்டி அருகே உள்ள லட்சுமிபுரம் வடக்கு தெரு ராஜா 24, கட்டட தொழிலாளி. வீட்டருகில் இவரது டூவீலரை நிறுத்தி விட்டு துாங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. இவரது புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Feb-2025