உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  போலீஸ் செய்திகள்..

 போலீஸ் செய்திகள்..

டூவீலர் திருட்டு தேனி: கோடாங்கிபட்டி முளைப்பாரியம்மன் கோயில் தெரு ஆட்டோ டிரைவர் நாகரத்தினரம் 36. இவரது டூவீலரை வீட்டருகே நவ.24 இரவு நிறுத்தினார். மறுநாள் காலை பார்த்த போது டூவீலரை காணவில்லை. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளி மாணவி மாயம் தேனி: வலையபட்டி கோவிந்தராஜ். இவரது மகள் உத்தமபாளையம் விடுதியில் தங்கி, கம்பத்தில் இயங்கி வந்த ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பின் பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் மாணவியை அவரின் அத்தை, விடுதிக்கு செல்ல தேனியில் இருந்து பஸ்சில் அனுப்பி வைத்தார். பின் விடுதிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது மாணவி வரவில்லை என விடுதியில் இருந்து தெரிவித்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கோவிந்தராஜ் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர். மின்சாரம் தாக்கி முதியவர் பலி தேனி: தேனி டி.பி., மேற்குத் தெரு சோனைமுத்து 73. ஆம்புலன்ஸ் டிரைவர். தனியாக வசித்து வந்தார். வீட்டில் மயங்கி கிடப்பதாக அவரது மகன் அமர்நாத்க்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, மின்சாரம் தாக்கியது தெரிந்தது. சோனை முத்துவை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர். மனைவி மாயம் : கணவர் புகார் சின்னமனுார்: கன்னிசேர்வை பட்டி ரைஸ் மில் தெரு கார்த்திகேயன் 36. இவரது மனைவி கவிதா 29. மகன், மகள் உள்ளனர். கடந்த நவ.23ல் கணவனுக்கும் மனைவிக்கும் குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கவிதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. கணவர் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். இளைஞர் தற்கொலை பெரியகுளம்: வடகரை கிருஷ்ணாபுரம் தெரு ரவீந்திரன் 30. திருமணம் ஆகவில்லை. தனியாக இருந்த ரவீந்திரன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது தாயார் வீரம்மாள் புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை