உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ.,யை தாக்கி தப்பியவரை தேடும் போலீசார்

சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ.,யை தாக்கி தப்பியவரை தேடும் போலீசார்

பெரியகுளம்: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சித்தார்த்தன் என்பவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ஜீவானந்தம் சென்றார். அவரை தாக்கி தள்ளி விட்டு தப்பிய சித்தார்த்தனை தென்கரை போலீசார் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சித்தார்த்தன் 46. அவர் மீது தென்கரை, கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்வதற்கு தேனி சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ., ஜீவானந்தம் சென்றார். வீட்டில் இருந்த சித்தார்த்தனிடம் கைது நடவடிக்கை குறித்து பேசினார். அவரை ஆக்ரோஷமாக தாக்கி தள்ளிவிட்டு சித்தார்த்தன் தப்பிச் சென்றார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஜீவானந்தம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். அவரது புகாரில் தென்கரை போலீசார் சித்தார்த்தனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை