உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாக்காடு வியூ பாய்ண்டில் போலீஸ் பாதுகாப்பு: இடுக்கி எஸ்.பி. உத்தரவு

லாக்காடு வியூ பாய்ண்டில் போலீஸ் பாதுகாப்பு: இடுக்கி எஸ்.பி. உத்தரவு

மூணாறு: மூணாறு அருகே ' லாக்காடு வியூ பாய்ண்ட்' பிரச்னைக்குறிய பகுதியாக மாறியதால், அங்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் உத்தரவிட்டார்.கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து 10 கி.மீ., தொலைவில் லாக்காடு எஸ்டேட் உள்ளது. அந்த தோட்ட நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேயிலை தோட்டத்தினுள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது. அதனுள் பயணிகள் போட்டோ எடுத்தும், பாறைகளில் ஓய்வு எடுத்தும் பொழுதை கழித்து வருகின்றனர். அதனால் அப்பகுதி ' வியூ பாய்ண்ட்' டாக மாறியதால் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஏராளமான கடைகள் முளைத்தன. அதனால் பிரச்னைகளும் தலை தூக்கின. கடைகளுக்கு பயணிகளை அழைப்பது, மாறுபட்ட விலை என பல்வேறு பிரச்னைகளால் கடை வைத்திருப்போருக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதால், அப்பகுதி பிரச்னைக்குறிய பகுதியாக மாறியது. அதனால் அங்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், தற்போது கோடை சுற்றுலா சீசன் துவங்கியதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 'சிக்னல் பாய்ண்ட்' முதல் ' கேப் ரோடு' வரை ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறும் தேவிகுளம் போலீசாருக்கு இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை