ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி முகாம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் பா.ஜ., சார்பில் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ஜ., நகரத் தலைவர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். பா.ஜ., ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் லிங்கப்பன், குமார், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம், குடும்ப வாக்காளர்களை ஒருங்கிணைப்பது, போலி வாக்காளர்கள், இறந்த வாக்காளர்களை நீக்குவது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வழங்கும் படிவங்களை முறையாக பூர்த்தி செய்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கச் செய்வது உட்பட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பா.ஜ., மண்டலத் தலைவர்கள் ராஜா, தெய்வம், நந்தினி, சந்தனபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். தெற்கு மண்டல தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.