உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி வனப்பகுதியில் கொட்டப்படும் பாலிதீன் கழிவுகள்

குமுளி வனப்பகுதியில் கொட்டப்படும் பாலிதீன் கழிவுகள்

கூடலுார்: குமுளி பஸ் ஸ்டாப் அருகே வனப்பகுதியில் கொட்டப்படும் பாலிதீன் கலந்த கழிவுகளால் வனவிலங்குகள் பலியாகும் அபாயம் உள்ளது.தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. இங்குள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளது. அதேவேளையில் தமிழகப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டிலேயே பஸ் நிறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. குமுளி பஸ் ஸ்டாப் அருகே வனப்பகுதிக்குள் பாலிதீன் கழிவுகள் சேர்ந்த குப்பை அதிகம் கொட்டப்படுகிறது. ஒட்டியுள்ள கேரளாவில் வனப்பகுதியில் குப்பையை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் கேரளாவில் இருந்து இரவில் கழிவுகளை தமிழக வனப் பகுதியில் வந்து கொட்டுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்பகுதியில் அதிகம் காணப்படும் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றி ஆகியவை உணவுப் பொருள்களுடன் கலந்து பாலிதீன் கழிவுகளையும் சேர்த்து உட்கொள்வதால் உயிர் பலியாகும் அபாயம் உள்ளது. இதனால் வனப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ