உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் , 'அவசர தேவைகளுக்கு விடுப்பு கேட்கும் ஊழியர்களுக்கு டார்கெட் இலக்கை முன்னிருத்தி விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது.தபால்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கோட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். செயலாளர் தெய்வராஜ், கோட்டப் பொருளாளர் கணவாமைதீன் முன்னிலை வகித்தார். ஏராளமான கிராமிய தபால்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ