உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எலுமிச்சை விலை விர்... கிலோ ரூ.200 ஆக உயர்வு

எலுமிச்சை விலை விர்... கிலோ ரூ.200 ஆக உயர்வு

கம்பம்:எலுமிச்சை வரத்து ஆண்டு முழுதும் இருந்தாலும், மே, ஜூனில் கணிசமாக விலை குறையும். ஆகஸ்ட், செப்டம்பரில் மீண்டும் வரத்து ஆரம்பமாகி, அக்., கடைசி வரை இருக்கும். எலுமிச்சை சாகுபடியில் வைரஸ் நோய் தாக்குதலால், தற்போது வரத்து குறைந்துள்ளது. இதனால், சில்லரை விலை கிலோ, 200 ஆக உயர்ந்துள்ளது. உழவர் சந்தையில் கிலோ, 150 வரை விற்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, வருஷநாடு பகுதிகளில் எலுமிச்சை அதிகம் சாகுபடியாகிறது. தற்போது வரத்துக் குறைவால் விலை, கிலோ 200 வரை உயர்ந்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.எஸ்.முருகன், எலுமிச்சை வியாபாரி, கம்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை