உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளியாறு மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி துவங்கியது

சுருளியாறு மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி துவங்கியது

தேனி மாவட்டம், சுருளியாறு மின்நிலையம் 1978 ல் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்டது. இங்கு நிறுவப்பட்டுள்ள ஜெனரேட்டர் ஆஸ்திரிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இங்கு 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தினமும் மாலையில் மின்உற்பத்தி செய்யப்படும். காலை, மாலை என பீக் ஹவர்சில் ஏற்படும் கூடுதல் தேவையை சமாளிக்க இந்த மின்உற்பத்தி பயன்பட்டது.2021 ல் இந்த மின்நிலையத்திற்கு இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் குழாய் 220 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்தது. அந்த குழாயை மாற்றி புதுக் குழாயை பொருத்தும் பணி, பெயிண்டிங் பணிகள் ரூ.10 கோடியில் சமீபத்தில் முடிந்தது. பின் மின் உற்பத்தியை துவங்கிய போது, மின்நிலைய ஜெனரேட்டரிலும் , இயந்திரங்களில் பழுது ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மின்உற்பத்தி நிறுத்தி இயந்திரங்களில் உள்ள பழுதை நீக்க குறுகிய கால டெண்டர் விடப்பட்டது.டெண்டர் எடுத்த நிறுவனம் ஜெனரேட்டரில் இருந்த நாசில்களை கழற்றி கோவைக்கு கொண்டு சென்று, அங்கு நாசில்களை ரீ கண்டிசனிங் செய்து, ஜன 16 ல் இருந்து சுருளியாறு மின்நிலையத்தில் இயந்திரங்களை பொருத்தும் பணிகளை வாரிய அதிகாரிகள் மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் கடும் போராட்டத்திற்கு பின் நேற்று (ஜன. 20) மதியம் மின் உற்பத்தி துவங்கியது. வினாடிக்கு 141 கன அடி தண்ணீர் இரவங்கலாறு அணையிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த 28 மாதங்களாக முடங்கியிருந்த மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி