உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.1.51லட்சம் மதிப்பிலான விதை விற்பனைக்கு தடை

ரூ.1.51லட்சம் மதிப்பிலான விதை விற்பனைக்கு தடை

தேனி: மாவட்டத்தில் ஆண்டிபட்டி, சின்னமனுார், போடி, ராசிங்காபுரம், பத்ரகாளிபுரம் பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி, விதை ஆய்வாளர்கள் முத்துராணி, சத்யா ஆகியோர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோள விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். மேலும் விதை விற்பனையகங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கினர். விதைச் சான்றளிப்பு துறை வழங்கும் பதிவு சான்று இல்லாத ரூ.1.51 லட்சம் மதிப்பிலான 20 கிலோ காய்கறி விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. சட்ட விதிகளை மதிக்காமல் விதைகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைகாரர்களிடம் துணை இயக்குநர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை