உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜூனியர்களுக்கு பதவி உயர்வு சிறப்பு எஸ்.ஐ.,கள் பாதிப்பு

ஜூனியர்களுக்கு பதவி உயர்வு சிறப்பு எஸ்.ஐ.,கள் பாதிப்பு

தேனி:தமிழகத்தில் 1993ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள் பெறும் ஊதியத்தை விட, 1995ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ரூ.1600 கூடுதல் ஊதியம் பெறுவது குமுறலை ஏற்படுத்தியுள்ளது. 1993ல்இரண்டாம் நிலை காவலர் பணியிடத்தில் 10 ஆயிரம் பேர் சீருடைப் பணியாளர்கள்தேர்வா ணை யம் மூலம் பணியில் சேர்ந்தனர். 10 ஆண்டுகள் முடித்து 2003ல் முதல் நிலை காவலராகினர். 2008ல் தலைமை காவலர்களாகவும், 10 ஆண்டுகள் முடிந்து சிறப்பு எஸ்.ஐ.,களாகவும் பதவி உயர்வு பெற்றனர். இந்த சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு தற்போது அடிப்படை ஊதியமாகரூ.55,700 கிடைக்கிறது.1995ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு 2024 ஜூலையில் பதவி உயர்வு வழங்குவதற்கு பதிலாக 7 மாதங்கள் முன்பாக ஜனவரியில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 1993ல் பணியில் சேர்ந்து தற்போது சிறப்பு எஸ்.ஐ.,களாக உள்ளவர்களை விட இவர்கள் ரூ.1600 கூடுதலாக ரூ.57,300 பெறுகின்றனர். 1993ல் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.,க்கள் குறைதீர் முகாம்களில் எஸ்.பி.,க்கள் முதல் டி.ஐ.ஜி.,க்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.அவர்கள் கூறியதாவது: மாநிலம் முழுதும் 10 ஆயிரம் சிறப்பு எஸ்.ஐ.,கள் பாதிக்கப்பட்டுள்ளோம். 2026 ஜன.1ல் 8 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு சம்பளத்தை வழங்க உள்ளது. அந்த அகவிலைப்படி மாநிலத்திலும் உயரும். அப்போது, ஜூனியர்களுக்கு மேலும் சம்பள உயர்வு கிடைக்கும். சீனியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவோம். இந்த பிரச்னையை சரி செய்ய டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ