உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் கேட்டு மறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் கேட்டு மறியல் போக்குவரத்து பாதிப்பு

கம்பம்: கம்பம் புதுப்பட்டியில் குடிநீர் கேட்டு நேற்று மாலை பெண்கள் திடீர் பஸ் மறியல் போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் உத்தமபாளையம் கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.க.புதுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டிருந்தது. பராமரிப்புப் பணிகள் செய்வதாக கூறி பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளையை நிறுத்தி வைத்தது. இதனால் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் பொது மக்கள் கோபம் அடைந்தனர்,பராமரிப்புப் பணிகள் முடிந்து சப்ளையை துவக்கிய போது மோட்டார் பழுது ஏற்பட்டதாக கூறி மீண்டும் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நேற்று மாலை நெடுஞ்சாலையில் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி. வெங்கடேசன் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக தண்ணீர் சப்ளையை சீராக்கியதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !