உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்

ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குப்பை கொண்டு செல்ல புதிதாக 23 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளனர்.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன.பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் குப்பை கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்கள் இல்லை.தள்ளு வண்டிகளில் குப்பை சேகரித்து கிடக்கிற்கு கொண்டு செல்வதில் சிரமமும் நேர விரயமும் ஆகிறது.குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வாங்குவதற்கான நிதிநிலை பல ஊராட்சிகளில் இல்லை. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக 23 பேட்டரி வாகனங்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக வந்துள்ளன.அதிகாரிகள் கூறியதாவது:தூய்மை பாரத இயக்க திட்டத்தில் முதல் கட்டமாக ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு 23 வாகனங்கள் வந்துள்ளன. பேட்டரி மூலம் இயங்கும் இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் ஊராட்சிகள் வாரியாக பிரித்து வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை