உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையில் மழை உயர்கிறது நீர்மட்டம்

பெரியாறு அணையில் மழை உயர்கிறது நீர்மட்டம்

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் நீர்மட்டம் 121.30 அடியாக உயர்ந்தது.கடந்த மூன்று தினங்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2293 கன அடியாக இருந்தது. நேற்றும் மழை தொடர்ந்தது. தேக்கடியில் 52 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 121.30 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1376 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 456 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2885 மில்லியன் கன அடியாகும். நேற்று காலையில் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் மழை பெய்யவில்லை. மாலையில் மழை பெய்ய துவங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. அணையில் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் மட்டுமே 2ம் போக சாகுபடியை தண்ணீர் பற்றாக்குறையின்றி முழுமையாக செய்ய முடியும். இதனால் மழை தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ