மேலும் செய்திகள்
58ம் கால்வாய் வழியாக நீர் திறப்பு
30-Oct-2025
ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் குறைவதால் 58ம் கால்வாயில் வெளியேறும் நீரின் அளவும் குறைகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் வசதி உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 67 அடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே கால்வாய் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். அணை நீர்மட்டம் அக்.29ல் 69.46 அடியாக இருந்த நிலையில் 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் வெளியேறியதால் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்தது. தற்போது அணை நீர்மட்டம் 67.65 அடியாக குறைந்துள்ளதால் 58ம் கால்வாய் வழியாக வெளியேறும் நீரின் அளவும் வினாடிக்கு 70 கனஅடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தால் மட்டுமே 58ம் கால்வாய் வழியாக கூடுதல் நீர் வெளியேற்ற முடியும். நேற்று அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக வினாடிக்கு 935 கன அடி, குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறியது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1793 கன அடி.
30-Oct-2025