உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனு மீது வழக்குப்பதிவு

மனு மீது வழக்குப்பதிவு

பெரியகுளம்: பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த அர்ச்சகர் சிவகாமேஸ்வரன் 61. கடந்த ஜூன் 27ல் இவரது வீட்டின் மாடிச்சுவர் இடிந்து சிவகாமேஸ்வரன் மீது விழுந்தது. இதில் அவரது கால் முறிந்தது. மதுரை மருத்துவமனையில் 6 மாதங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த டிச., மாதம் முன்னோர்களுக்கு சாமி கும்பிட அலமாரியில் பார்த்தபோது, சிறிய அளவிலான பிள்ளையார், தண்டபாணி, வரலட்சுமி,திருவாச்சி, பீடத்துடன் அம்மன், விக்ரஹம், சிவலிங்க பீடம், ஐந்து தலை நாகராஜன் இணைந்த சிவலிங்கம் பீடம் உட்பட ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 25 வகையான பொருட்கள் திருடு போனது.இது குறித்து பெரியகுளத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் திருட்டு குறித்து மனு கொடுத்தார். மனு போலீசாருக்கு பரிந்துரைத்தனர். இதன்பேரில் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்