உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் - சுருளிப்பட்டி ரோட்டை அகலப்படுத்த கோரிக்கை

கம்பம் - சுருளிப்பட்டி ரோட்டை அகலப்படுத்த கோரிக்கை

கம்பம் : ''கம்பம்- சுருளிப்பட்டி ரோட்டை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது சுருளி அருவியாகும். ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளும், இறந்தவர்களுக்கு திதி கொடுக்க பொது மக்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் புகழ்பெற்ற தலமாகும். சுருளி அருவிக்கு செல்ல பயன்படும் ரோடு 2 கி.மீ., துாரத்திற்கு குறுகலாக உள்ளது. கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி வரை உள்ள இந்த ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கில் வாகனங்கள் சுருளி அருவிக்கு சென்று வருகின்றன. இந்த ரோட்டில் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் விலகிச் செல்வது கடினமாகும். கம்பத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டை அகலப்படுத்தி பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை