உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குடியிருப்போர் குரல் குடிநீர் வினியோகம் துண்டிப்பு, மின்தடையால் அவதி * வீரபாண்டி பேரூராட்சி வயல்பட்டி பொது மக்கள் தவிப்பு

 குடியிருப்போர் குரல் குடிநீர் வினியோகம் துண்டிப்பு, மின்தடையால் அவதி * வீரபாண்டி பேரூராட்சி வயல்பட்டி பொது மக்கள் தவிப்பு

தேனி:‛‛குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டதால் மக்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். திறப்பு விழா காணாமல் சேதமடையும் சமுதாய கூடம், ‛பேவர் பிளாக்' கற்கள் பதிக்காமல் தெரு குண்டும் குழியுமாக உள்ளதால் பொது மக்கள் சிரமம் அடைகின்றனர். வீரபாண்டி பேரூராட்சியின் 8, 9, 10 வார்டுகள் அமைந்துள்ள வயல்பட்டி. மூன்று வார்டுகளில் 2300 பேர் வசிக்கின்றனர். இவர்களின் தினசரி பயன்பாட்டிற்காக தாடிச்சேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 90,000 லிட்டரும், பேரூராட்சியின் சார்பில் முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு மூலம் 30 ஆயிரம் லிட்டர் குடிநீரும் வழங்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக வயல்பட்டியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வூரின் அடிப்படை தேவைகள் குறித்து மு.மணிகண்டன், வை.மணிகண்டன், காமராஜ், சிவசக்திநாதன், சுயேட்சை கவுன்சிலர் முத்துப்பாண்டி, கழுவத்தேவர் ஆகியோர் கூறியதாவது: குடிநீருக்காக தவிப்பு பேரூராட்சியில் இருந்து உறைகிணறு மூலம் கிடைக்க வேண்டிய 30 ஆயிரம் லிட்டர் குடிநீரில், 10 ஆயிரம் லிட்டர் வயல்பட்டி காலனி மேல்நிலைத் தொட்டிக்கு வருகிறது. இந்த குடிநீரும் 6 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் ஆவதால் பொது மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். மின் தடை அடிக்கடி ஏற்படுவதால் மின்மோட்டார் இயக்கி போர்வெல் தண்ணீரும் பெற முடியவில்லை. அதிகாலை 3:00 மணிக்கு ஏற்படும் மின்தடை காலை 11:00 மணிக்கு மீண்டும் வருகிறது. இதனால் அரையாண்டு தேர்வுக்கு படிக்கும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். வடக்குத்தெரு கிழக்குத் தெரு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். வீணாகும் அரசு பணம்: இரு ஆண்டுகளுக்கு முன் வயல்பட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. அந்த சமுதாயக்கூடம் இன்னும் திறப்பு விழா காணாமலேயே சேதப்படுத்தி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஏழை, எளிய மக்கள் விசேஷங்களை குறைவான வாடகையில் வைத்து பயனடைவர். வீரபாண்டி கொடுவிலார்பட்டி ரோடு சந்திப்பில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனை இடித்துவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். வயல்பட்டியில் 17 கம்பங்களில் மின்விளக்குகள் இல்லை. மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் 12 இடங்களில் மின்கம்பங்கள் தேவை என தெரிவித்து, மின்கம்பங்கள் கொண்டு வந்தும் பன்பாட்டிற்கு கொண்டு வராமல் ரோட்டில் கிடத்தியுள்ளனர். மின்வாரிய குறைகளை இங்குள்ள கடையில் ஒரு நோட்டில் எழுதி வைத்து விடுவோம். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் பகலில் எழுதிவைத்த குறைகளை மாலை 7:00 மணிக்கு வந்துதான் பார்க்கின்றனர். மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை