பென்னிகுவிக் பிறந்தநாள் விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
கூடலுார்: பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை (ஜன.15) லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் அரசு சார்பில் விழா கொண்டாடப்படுவதால் முன்னேற்பாடுகள் குறித்து தேனி கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக் 1841 ஜன.15ல் பிறந்தார்.இவரது பிறந்த நாள் விழாவை பொங்கல் விழாவாக ஆண்டுதோறும் தமிழக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் நாளை அரசு சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து தேனி கலெக்டர் ஷஜீவனா நேற்று ஆய்வு செய்தார். கூடலுார் நகராட்சித் தலைவர் பத்மாவதி, ஆர்.டி.ஓ., தாட்சாயிணி, துணை கலெக்டர் (பயிற்சி) டினு அரவிந்த், உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி கமிஷனர் கோபிநாத், தாசில்தார் சுந்தர்லால், தி.மு.க.நகர செயலாளர் லோகந்துரை, சுகாதார ஆய்வாளர் விவேக் உடன் இருந்தனர்.