உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துணை முதல்வர் வருகைக்காக ரோடு சீரமைப்பு பணி தீவிரம்

துணை முதல்வர் வருகைக்காக ரோடு சீரமைப்பு பணி தீவிரம்

தேனி : தமிழக துணை முதல்வர் உதயநிதி தேனி வருகையையொட்டி ரோடு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நகராட்சி சார்பில் தார்ரோட்டில் சிமென்ட் கலவை கொட்டி சீரமைக்கப்பட்டது.தமிழக துணை முதல்வர் உதயநிதி நாளை(ஜூன் 16) தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்திலும், தி.மு.க., கட்சி நிகழ்ச்சியில்பங்கேற்கிறார். இதற்காக தேனி நகர்பகுதியில் பல மாதங்களாக ரோட்டில் சென்டர் மீடியன் பகுதியில் குவிந்து கிடந்த மணல்கள் அகற்றப்பட்டன. அதே போல் ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் ரோட்டில் இருபுறமும் புதர்கள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்திருந்த ரோடு பள்ளங்கள் சீரமைக்கப்பட்டது.சிமென்ட் கொட்டி 'பேட்ஜ் ஒர்க்': கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் முகாம் அலுவலகம் செல்லும் தார் ரோட்டில் பல இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதனை தேனி நகராட்சி சார்பில் சிமென்ட் கலவை கொட்டி ரோடு சீரமைக்கப்பட்டது. இதே போல் 2023ல் துணைமுதல்வர் உதயநிதி வந்த போது இந்த பகுதியில் குறிப்பிட்ட துாரத்திற்கு தார் ரோடு அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை