உள்ளூர் செய்திகள்

வழிப்பறி

தேனி: புதுச்சேரி கொத்தபுரிநத்தம் தமிழரசன் 31. எலக்ட்ரீசியன். தேனி திட்டச்சாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். சொந்த ஊருக்கு சென்று நேற்று முன்தினம் அதிகாலை 3:20 மணிக்கு திட்டச்சாலை காஸ் குடோன் அருகே நடந்து சென்றார். டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள் தமிழரசனிடம் பேசிவிட்டு தருவதாக அலைபேசியை கேட்ட போது அவர் தர மறுத்தார். அவரை மிரட்டி ரூ.150 பணம், ரூ.500 மதிப்புள்ள கட்டிங் பிளேடு, சுத்தியல், ஏ.டி.எம்.,கார்டு, பான்கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை