உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாம்பழக்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ.12.25 லட்சம் மானியம்

மாம்பழக்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ.12.25 லட்சம் மானியம்

தேனி: மாம்பழக்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க அரசு ரூ.12.25 லட்சம் மானியம் வழங்குவதால் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா தலைமையில் மா விவாயிகளுக்கு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி, தோட்டக்கலை கல்லுாரி பேராசிரியை விஜயசாமுண்டீஸ்வரி பங்கேற்றனர். மா சாகுபடியில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கிளைகள் கவாத்து செய்தல், பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க ப்பட்டது. மேலும் மாவட்டத்தில் மானியத்தில் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ. 12.25 லட்சம் மானியமாக வழங்க உள்ளதாகவும்,மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தை பெரியகுளம் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜாஸ்மின், அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை