மேலும் செய்திகள்
யூரியா பற்றாக்குறை முதல்வர் சித்தராமையா கடிதம்
26-Jul-2025
தேனி: மாவட்டத்தில் உரக்கடைகளில் ஆய்வு செய்த வேளாண் துறையினர் இருப்பு பதிவில் குளறுபடி செய்த இரு கடைகளில் 38.4 டன் உரம் விற்பனை செய்ய தடை விதித்தனர். உரம், மருந்து விற்பனை கடைகளில் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் திலகர் தலைமையில் அலுவலர் பிரசன்ன மணிகண்டன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தேனியில் இரு உரக்கடைகளில் விற்பனை முனையத்தில் இருந்த இருப்பிற்கும், கடையில் இருப்பு அதிகம் இருந்தது. அந்த கடைகளில் இருந்த 38.4 டன் உரம் விற்க தடை விதித்தனர். விவசாயிகளுக்கு பில் வழங்காத, அனுமதி பெறாமல் சில உரங்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடை விற்பனை உரிமத்தை தற்காலிக தடை செய்தனர். வேளாண் துறையினர் கூறுகையில், 'உரக்கடைகளில் குறைந்தபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால், பில் வழங்காமல் விற்பனை செய்தால் அல்லது உரம் தொடர்பான புகார்களை 96551 91883 என்ற அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்,' என்றனர்.
26-Jul-2025