உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் வசதி இல்லாத சன்னாசிபுரம்

பஸ் வசதி இல்லாத சன்னாசிபுரம்

போடி: போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சன்னாசிபுரம். போடியில் இருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ளது. 80 குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு செல்ல ரோடு வசதி இருந்தும் பஸ் வசதி இல்லை. இங்கு ஆரம்ப பள்ளி மட்டுமே உள்ளது. நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்க 2 கி.மீ., தூரம் போடிக்கு நடந்தும், சைக்கிள், டூவீலர், ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் காலை, மாலை இரு நேரங்களில் பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !