உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

உத்தமபாளையம், : உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் காத்துன் ஜன்னத் தலைமை வகித்தார். நிர்வாக குழு செயலர் முகமது சைபுல் இஸ்லாம் முன்னிலை வகித்தார். முதல்வர் நூருல் ஷிபா வரவேற்றார். தன்னம்பிக்கை பேச்சாளர் சசிலயா மாணவர்கள் எப்படி கல்வியை எதிர்கொள்ள வேண்டும் என்று பேசினார். தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்செல்வன், தேனி டி.எஸ்.பி. பார்த்திபன் பங்கேற்றனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மாணவர்கள் சிலம்பம், ஸ்கேட்டிங், கராத்தே செய்து காண்பித்தனர். அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ