உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்டங்களில் விடைத்தாள் மையங்கள் அமைக்கப்படுமா பள்ளிக்கல்வி அதிகாரிகள் வலியுறுத்தல்

 மாவட்டங்களில் விடைத்தாள் மையங்கள் அமைக்கப்படுமா பள்ளிக்கல்வி அதிகாரிகள் வலியுறுத்தல்

தேனி: 'மாவட்டங்களில் நடத்தப்படும் கல்வித்துறை, உயர்கல்வி, போட்டித்தேர்வுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஆகியவற்றின் வினாத்தாள்கள், விடைத்தாள்களை பாதுகாக்க நிரந்தர பாதுகாப்பு மையங்களை துவக்க அரசு முன்வர வேண்டும்,' என பள்ளிக் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் பருவத்தேர்வு, பொதுத்தேர்வுகள், உயர்கல்வித்துறை செமஸ்டர் தேர்வுகள், சீருடைப்பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த தேர்வு முகமை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என ஆண்டுதோறும் 34க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், விடைத்தாள்கள் தற்போது தனியார் பள்ளிகளில் அறைகளை வாடகைக்கும், இரவல் கேட்டும் பயன்படுத்தும் நிலையுள்ளது. உயர்கல்வித்துறையால் நடத்தப்படும் தேர்வுகள், சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள், அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றின் வினாத்தாள்களையும், தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களையும் பாதுகாக்க மாவட்டங்களில் பாதுகாப்பு மையங்கள் இல்லை. இவற்றை பாதுகாக்காக தனியார் பள்ளிகள், கல்லுாரிகளின் கட்டடங்களை ஆண்டுதோறும் அரசு துறையினர் வாடகை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை தவிர்க்க அரசு அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும், பாதுகாப்பு மையங்களை அமைக்க மாநில அரசு, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் மையங்கள் மாவட்டங்களில் துவக்கப்பட்டால், விடைத்தாள்களை முறையாக சேமித்து பயன்படுத்த முடியம். தனியார் கல்லுாரி, பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய வாடகை மிச்சமாகும். பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து மாவட்டந்தோறும் விடைத்தாள் திருத்தும் மற்றும் பாதுகாப்பு மையங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்