உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்துங்கள்; கூடுதல் பணிச்சுமையால் ஒப்பந்தப் பணியாளர்கள் தவிப்பு

மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்துங்கள்; கூடுதல் பணிச்சுமையால் ஒப்பந்தப் பணியாளர்கள் தவிப்பு

தேனி: ‛‛தேனி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்படுவதால் ஊதியத்தை அதிகரித்து மாதம் ரூ. 26,000 வழங்க வேண்டும்,'' என பணியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இம்மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் உள்ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பிளஸ் 2 படித்த பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிகின்றனர். இப்பணி ஒரு உள்ள்ளாட்சியில் 9500 மக்கள் தொகைக்கு ஒருவர் வீதம் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் 138 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் உள்ளாட்சி அமைப்புகள் உள்ள பகுதிகளில் தெருக்களில் வீடு வீடாக சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தொழுநோய், காசநோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகளின் அறிகுறிகள் உள்ளதாக என பொது மக்களிடம் சென்று இதய துடிப்பை பரிசோதித்து, ரத்தப் பரிசோதனை செய்து, விபரங்களை சேகரித்து, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது வட்டார மருத்துவ அலுவலர்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை உள்ளாட்சி பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கும். அதில் கூடுதல் நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வீடுதேடிசென்று வழங்குவார்கள். கூடுதல் பணிசுமை:இந்நிலையில் புற்றுநோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய், மனநல பாதிப்பு, பி.சி.ஓ.டி., (கர்ப்பவாய் புற்றுநோய்) கண்டறிய சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர். நாள்தோறும் 2 மணி நேரம் மட்டுமே பணி என உத்தரவில் கூறிவிட்டு தற்போது நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 மணி நேரம் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.4500, ஊக்க தொகை ரூ. 1000 சேர்ந்து மொத்தம் ரூ.5500 வழங்கப்படுகிறது. இதனால் தினசரி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை