மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை; பெண்கள் உட்பட 7 பேர் கைது
21-Oct-2024
கம்பம்; தேனி மாவட்டம் கம்பத்தில் 21 கிலோ கஞ்சாவுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கேரளாவிற்கு டூவீலரில் கடத்த உள்ளதாக கம்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கூடலுார் ரோடு குப்பைக்கிடங்கு பகுதியில் கஞ்சாவை பிரித்துக் கொண்டிருந்தவர்களை வளைத்தனர். விசாரணையில்அவர் கள் வத்தலக்குண்டுவை சேர்ந்த துளசி 43, பள்ளபட்டியை சேர்ந்த ஆதித்யன் 24, கம்பத்தை சேர்ந்த முஜாஹித் அலி 24, ஹரிஹரன் 24, ஆசிக் அகமது 24 ,எனத்தெரிந்தது. அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 21 கிலோ கஞ்சா, இரண்டு டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனை செய்த ஆந்திராவை சேர்ந்த நாகராஜ் என்பவரை தேடிவருகின்றனர்.
21-Oct-2024