உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 22 கிலோ கஞ்சா பறிமுதல்: கைது 1

22 கிலோ கஞ்சா பறிமுதல்: கைது 1

கம்பம்: கம்பம் போலீசார் 18ம் கால்வாய் பாதையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். நாகம்மாள் கோயில் அருகில் சென்ற காரை சோதனை செய்தனர். சாக்குப்பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதிப்பு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம். காரை பறிமுதல் செய்து கம்பம் விவேகானந்தர் தெரு முருகேசனை கைது செய்தனர்.விசாரணையில் ஆந்திராவில் பாடேரு மலைப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கஞ்சாவை வாங்கி வந்து கம்பத்தில் விற்பனை செய்ய முருகேசன் திட்டமிட்டிருந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை