மேலும் செய்திகள்
ஆரோக்கியமாக வாழ உணவு தேர்வு முக்கியம்
10-Jul-2025
கம்பம், : கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உடல் ஆரோக்கியம் பற்றிய கருத்தரங்கு, கண்காட்சி நடந்தது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சவுந்தர ராசன் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளி தாளாளர் கவிதா முன்னிலை வகித்தார். பள்ளியின் முதுநிலை முதல்வர் ஸ்வாதிகா வரவேற்றார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய டாக்டர் ராகேஷ் குமார் பேசுகையில் 'உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது அறிவு, செல்வம் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவரும் இப்போதிருந்தே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உரிய நேரத்தில் உணவு, காலையில் நடைபயிற்சி,யோகா, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் ஆரோக்கியம் அதுவாக வந்து சேரும்,' என்றார். நிகழ்ச்சியில் இயக்குநர் ஜெயஷிவானி, முதல்வர் கயல்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உடல் ஆரோக்கியம் பற்றிய கண்காட்சி நடந்தது.
10-Jul-2025