உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

தேனி: தேனி நாடார் சரசுவதி கலை கல்லுாரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தொல்குடி, புழம் பெயர் மக்களின் வாழ்வியல் விழுமியங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்க கண்காட்சியை கல்லுாரி செயலாளர் காசிபிரபு திறந்து வைத்தார்.கண்காட்சியில் பழங்கால தமிழ்ர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பெண்களின் அணிகலன்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. கருத்தரங்கிற்கு உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சித்ரா, ஜெர்மன் பன்னாட்டு அமைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவிப்பேராசிரியர் ரஞ்சித்குமார், கப்பலுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் முருகேசன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ