கல்லுாரியில் கருத்தரங்கம்
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்.,கல்லுாரி சுகாதார கழகம் சார்பில் 'அக்குப்பஞ்சர், வாழ்க்கை முறை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். டாக்டர் வெங்கடேஷ்வரி அக்குப்பஞ்சர் சிகிச்சை முறை, உணவு முறைகள் உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். உதவிப்பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் முருகன் நன்றி கூறினார்.