மண் திருட்டு: லாரிகள் பறிமுதல்
ஆண்டிபட்டி : தெப்பம்பட்டி கண்மாயில் மண் திருடப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி எஸ்.ஐ. முகமது யஹ்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கண்மாயில் அனுமதியின்றி இரு டிப்பர் லாரிகளில் இயந்திரத்தை வைத்து மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இரு டிப்பர் லாரிகள், மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி வாகனங்களுக்கான டிரைவர் மற்றும் உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.