நவ.8 முதல் 21 வரை மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சிறப்பு முகாம்
தேனி: மாற்றத்திறனாளி மாணவர்களுக்காக மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த முகாமில் மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. முகாமில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து முடநீக்கியல், மனநலம், குழந்தைகள் நலம், காது மூக்கு தொண்டை, கண், நரம்பியல் டாக்டர்கள் பங்கேற்கின்றனர். முகாம்கள் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. முகாம்கள் நவ.,8 ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நவ.,12 போடி இசட்.கே.எம்., மேல்நிலைப்பள்ளி, நவ.,13 சின்னமனுார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, நவ., 14 கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, நவ.,19 பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலைப்பள்ளி, நவ.20 தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நவ.21 உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முகாம்கள் நடக்கிறது. முகாமில் அந்தந்த வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். முகாம் ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் செய்து வருகின்றனர்.