உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கம்பம் : நகராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் கம்பம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் வனிதா தலைமையில் நடைபெற்ற முகாமில் டாக்டர்கள் பானுமதி, பெரிய முத்து ஆகியோர் பரிசோதித்தனர். துணை தலைவர் சுனோதா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.சின்னமனூர் அரசு மருத்துவமனையில் நகராட்சி தலைவர் அய்யம்மாள் தலைமையில் நடைபெற்ற முகாமில் டாக்டர்கள் சிவக்குமார், நீதிமன்னன் ஆகியோர் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றது . துப்புரவு அலுவலர் வேல்முருகன், அலுவலர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம்: நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம், மாவட்ட அரசு மருத்துவமனையில் நடந்தது. நகராட்சி தலைவர் சுமிதா தலைமை வகித்தார். கமிஷனர் தமிஹா சுல்தானா,மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் அசன்முகமது, கவுன்சிலர்கள் சுதா, பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் ரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டது. 140 தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை