உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அக்.24ல் நலவாரிய சிறப்பு முகாம்

அக்.24ல் நலவாரிய சிறப்பு முகாம்

தேனி: தமிழகத்தில் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்காக வீட்டு பணியாளர்கள் நலவாரியம் செயல்படுகிறது. இதில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யலாம். அதே போல் ஆன்லைன் வீட்டு உபயோக பொருட்கள் டெலிவரி, உணவு டெலிவரி செயப்வர்கள், 'கிக்' நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக சிறப்பு முகாம் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் அக்.,24 காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. பதிவு செய்ய வருபவர்கள் அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஆதார், ரேஷன்கார்டு, வயது ஆவணம், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் கொண்டு வர வேண்டும். முகாமினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு சமூகபாதுகாப்புத்திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி