உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி : போடி தாலுகா மேலசொக்கநாதபுரத்தில் சிசம் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நாளை (செப்.,30ல்) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்க உள்ளது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு, பெண்கள் நலன், குழந்தைகள் நலன், பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளன. மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுமானம், அமைப்பு சாரா, ஆட்டோ ஓட்டுநர் நலவாரியம் உள்ளிட்ட 17 வாரியங்களில் பதிவு செய்தவர்கள், ஓய்வூதியர்கள், போடி தாலுகாவை சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம். பங்கேற்க வருவோர் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய அடையாள அட்டை நகல், ஆதார் நகல் உள்ளிட்டவற்றுடன் பங்கேற்குமாறு தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை