வாரந்தோறும் தடுப்பூசி விபரங்களை இணையத்தில் பதிவேற்றுவது கட்டாயம் மாநில திட்ட அலுவலர் அறிவுரை
தேனி: 'வாரந்தோறும் புதன்கிழமைகளில்அந்தந்த சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில்தடுப்பூசிகளின் கையிருப்பு விபரம்,அதன் தன்மை,பயன்படுத்திய விபரங்களை 'ஈ-வின்'இணையத்தில் மருந்தாளுநர்கள் பதிவேற்றுவது கட்டாயம்,' என வீரபாண்டி துணை சுகாதார செவிலியர் பயிற்சி கல்லுாரியில் நடந்த ஆலோசனை முகாமில் மாநில திட்ட அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் தெரிவித்தார். இந்த முகாமில்ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், நகர்புற நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் பங்கேற்றனர். இவர்களுக்குமின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வெட்வொர்க் பயன்பாட்டு நடைமுறைகள் குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது.மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜவஹர்லால் துவக்கி வைத்தார். நேர்முக உதவியாளர் திருக்கண்ணன், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துப்பாண்டி, தேனி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் தடுப்பூசி மருந்துகளை குளிரூட்டப்பட்ட சாதனங்களில் எவ்வாறு பராமரிக்க வேண்டும். பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.