மேலும் செய்திகள்
மாநில சதுரங்க போட்டி சிறுவர், சிறுமியர் அசத்தல்
31-Oct-2024
தேனி : திருச்சியில் நடந்த மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டியில் தேனி வெற்றி பெற்றது.திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டி நடந்தது. போட்டிகள் 11,14,17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்தது.திருச்சி, திண்டுக்கல், மதுரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. இதில் தேனி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அணி 17 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடமும், 14,11 வயது பிரிவில் இரண்டாமிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.வெற்றி பெற்ற அணிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து செயலாளர் பூஞ்சோலை கோப்பை வழங்கினார். தேனி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் செயலாளர் ராஜேஷ் வெற்றி பெற்ற அணியை வழி நடத்தினார்.
31-Oct-2024