உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலையானவர் உடலை வாங்க மறுத்து போராட்டம்

கொலையானவர் உடலை வாங்க மறுத்து போராட்டம்

ஆண்டிபட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் லோகேஸ்வரன் 22. இவர் நண்பர் சிவாவுடன் சேர்ந்து கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரோடு அமைக்கும் பணிக்கு சென்றுள்ளார்.லோகேஸ்வரனுக்கு உடல் நலக்குறைவு என கூறி பிப்., 29 ல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.வயிற்றுப் பகுதியில் கல்லால் தாக்கி காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசாருக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவத்தை உறுதி செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஆப்பரேஷனுக்கு பின் லோகேஸ்வரன் நேற்று முன்தினம் இறந்தார்.தாண்டிக்குடி போலீசார் கொலை வழக்காக மாற்றி இதில் தொடர்புடைய உசிலம்பட்டி மாதரை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில் லோகேஸ்வரன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். போலீசார் சமரசம் செய்து உறுதி அளித்த பின் உடலை பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை