உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 15 சத்து மாத்திரை விழுங்கிய மாணவர் மருத்துவமனையில் அனுமதி

15 சத்து மாத்திரை விழுங்கிய மாணவர் மருத்துவமனையில் அனுமதி

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட 15 சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத் துறை மூலம் 'பெரோஸ் சல்பேட் அண்ட் போலிக் ஆசிட்' என்ற சத்து மாத்திரை ஒரு மாணவருக்கு ஒன்று வீதம் பள்ளிகளில் வாரம் ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரையை மதிய உணவுக்கு பின் பள்ளி ஆசிரியர் முன்னிலையில் மாணவர்கள் சாப்பிடுவர். நேற்று மதியம் சக்கம்மாபட்டியை சேர்ந்த 7 ம் வகுப்பு மாணவர், தான் ஒல்லியாக இருப்பதாகவும், அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் விரைவில் குண்டாகலாம்' என்று தெரிவித்து தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 15 பேரிடம் மாத்திரைகளை வாங்கி அனைத்து மாத்திரைகளையும் விழுங்கி உள்ளார். இது குறித்து தலைமை ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் அளித்தார். மாணவரை பள்ளியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி