உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களின் படைப்பு கண்காட்சி

மாணவர்களின் படைப்பு கண்காட்சி

ஆண்டிபட்டி,: ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் ஜி20 நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரத்தை விளக்கும் வகையில் மாணவர்களின் படைப்பு கண்காட்சி நடந்தது. இரண்டு படைப்புகள் என்ற அடிப்படையில் மாணவர்கள் இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், மெக்சிகோ, இந்தோனேசியா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் சிறப்புகள் குறித்தும், அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாடுகளை விளக்கும் விதமாகவும் ஓவியங்கள் மற்றும் தங்களது படைப்புகளை கண்காட்சியாக வைத்திருந்தனர். கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கத்தையும் கூறினர். கண்காட்சியை பள்ளி தாளாளர் பாண்டிச்செல்வம் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை முதல்வர் வீரலட்சுமி, துணை முதல்வர் ஷர்மிலி, பள்ளி இயக்குனர்கள் கபில், டாக்டர் ஸ்ரீவாகினி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை