மேலும் செய்திகள்
பெரியகுளத்தில் இணைப்பு ரோடு சேதத்தால் அவதி
29-Nov-2024
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் ரபீக்ராஜா. இவரது மகன் ஷாஜகான் 19.இவர் கோவையில் உள்ள தனியார் கலைக்கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்தார். தேர்வு முடித்து விடுமுறைக்கு பெரியகுளம் வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு சுதந்திரவீதி பகுதியில் உள்ள மருந்துக்கடையில் மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு டூவீலரில் சென்றார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் டூவீலருடன் கீழே விழுந்த ஷாஜகான் பலத்த காயமடைந்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.-
29-Nov-2024