மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
11-Nov-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர் செந்தில்குமார் 45. இவரது மகள் மகேஸ்வரி 17, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து மகேஸ்வரி தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளர். இரவு 7:00 மணிக்கு தனது வீட்டிற்குச் சென்று தனது அறையின் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டார். கோயிலுக்கு சென்று திரும்பிய அவரது தாய், மகேஸ்வரி இருந்த அறையின் கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துப் பார்த்த போது மகேஸ்வரி தூக்கிட்ட நிலையில் இறந்து இருந்தார். புகாரில் ஆண்டிபட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
11-Nov-2025