மாணவி மாயம்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மேலப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் பூமா திவ்யா 19, ஆண்டிபட்டி அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டுபடித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி குறித்த விபரம் தெரியவில்லை. தந்தை மணிகண்டன் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.