மேலும் செய்திகள்
மாவட்ட கலைத்திருவிழா போட்டி நாளை துவக்கம்
28-Oct-2025
தேனி: தேனி மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர். கலைத்திருவிழா போட்டிகள் வீரபாண்டி சவுராஷ்டிரா கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் அரசுப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கும், நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது. பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் குழுநடனம், தனிநபர் நடனம், களிமண்சிற்பம், நாடகம், தெருக்கூத்து, மணல் ஓவியம், பானை ஓவியம், இசைக்கருவி மீட்டல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் மோகன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் கரியன், ஆசிரியர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
28-Oct-2025