மாணவி தற்கொலை
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி அருகே சின்ன ஒவுலாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் மகள் பிரியதர்ஷினி 16. இவர் ராயப்பன் பட்டி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் உடனே வீட்டிற்கு திரும்பி வந்து, வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தந்தை வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து இறக்கி உள்ளனர். ராயப்பன் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.