கோயில் வழிபாடு பிரச்னை இருதரப்பினருக்கு சம்மன்
தேனி: அன்னஞ்சி காளியம்மன் கோயில் வழிபாடு பிரச்னையில் நாளை (ஜூன் 19ல்) இருதரப்பினர் விசாரணைக்கு ஆஜராக பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் சம்மன் அனுப்பி உள்ளார்.இக்கோயில் வழிபடுவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்தது. இதுகுறித்து தேனி தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. அல்லிநகரம் போலீசார் இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரும் கோயிலுக்கு செல்ல தடை விதித்திருந்தார். இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருஐயப்பன் தலைமையில் எஸ்.பி., சிவபிரசாத்திடம், வழிபாடு நடத்த அனுமதி வழங்கவும், இடையூறாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி' மனு அளித்தனர். பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நாளை காலை 11:00 மணிக்கு விசாரணையில் ஆஜராக இருதரப்பு நிர்வாகிகள், கோயில் முக்கியஸ்தர்களுக்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ., ரஜத்பீடன் 'சம்மன்' அனுப்பி உள்ளார்.