உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தம்

சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தம்

கூடலுார்: வண்டிப்பெரியாறு தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை தாக்கி ஆடு பலியானதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.கேரளா வண்டிப்பெரியாறு ஹாரிசன் மலையாள லிமிடெட் வாலாடி இரண்டாம் பிரிவு பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான ஆடுகளை சமீபத்தில் சிறுத்தை கொன்றது. ஆடு பலியான இடத்தில் சிறுத்தையின் கால் தடம், எச்சம் ஆகியவை கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டது. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இதனால் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் வனத்துறை சார்பில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன,சிறுத்தை வரும் நேரம் கண்டறிந்து அவற்றை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை